அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..

By 
aeps

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார்.

தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து இருப்பதால் தடைகள் நீங்கி உள்ள நிலையில் கட்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களுடன் அவர் தயாராகி வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதாவுடன் உள்ள உறவை உறுதிப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார்.

அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர். டெல்லியில் அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க. தலைவர்களும் இன்று இரவு டெல்லியில் தங்க உள்ளனர். நாளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 
 

Share this story