எடப்பாடியாரின் 70-வது பிறந்த நாள் : நாஞ்சில் பி.சி.அன்பழகன் நூல் வழங்கி ஆனந்தம்..

By 
pca6

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் நாளை 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

இந்த ஆண்டு 70-வது பிறந்த நாள் காணும் எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்த அவரை, மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து முன் கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10 மணியளவில் சேலம் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் அவரது இல்லத்தில் திரைப்பட இயக்குனரும் நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் நூல் வழங்கி ஆனந்தமடைந்தார்.

மேலும், அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். கோவில்களில் நேற்று முதல் சிறப்பு வழிபாடு செய்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கும் பலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
 

Share this story