எடப்பாடியின் "கால்" நூற்றாண்டு : மருது அழகுராஜ் அதிரடி விளக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு :
'தன்னை கொல்ல வந்த துப்பாக்கி ரவைக்கும், தன் தொண்டையிலே இடம் தந்த நம் தொண்டை நாட்டு வள்ளல் எம்ஜிஆர்.,
தொண்டர்கள் வற்புறுத்தலால், அனகாபுத்தூர் ராமலிங்கம் என்னும் தொண்டன் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு,
'தொண்டன்தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்' என்பதனை மாற்றவே கூடாத விதியாக்கி.. ஒரு தொண்டனும் தலைமைக்கு போட்டியிட முடியும் என்னும் உலகம் வியக்கும் ஜனநாயகத்தை உருவாக்கினார்.
அது சரி.. இதெல்லாம் எடப்பாடிக்காக மண்சோறு சாப்பிடுகிற மாமேதைகளுக்கு தெரியுமோ.?
இந்த எடப்பாடியின் "கால்" நூற்றாண்டு என்பது,
சேலம் கண்ணன் காலில் விழுந்து, செங்கோட்டையன் காலில் விழுந்து, முத்துச்சாமி காலில் விழுந்து.. ராவணன் காலில் விழுந்து, டி.டி.வி. காலில் விழுந்து,
சின்னம்மா காலடியில் தவழ்ந்து.."தலை" ஆகி விட்டதாக தலைக்கனம் கொள்ளும் எடப்பாடி..
இப்படி, தலை.. கால்..புரியாமல் திரியலாமா...
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.