எட்டு வழி சாலை திட்டம் : அன்புமணி ராமதாசுக்கு, மத்திய அமைச்சர் பதில்

hjk8

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நாடாளுமன்ற மாநிலங்களவையில்,

'சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா?, இந்தத்திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவித்துள்ளதா?' என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய அரசால் இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. இந்தத்திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை' என பதில் அளித்தார்

Share this story