ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்.. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் - டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..

By 
opseps14

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் அக்கட்சியின் கொடியை பயன்படுத்துவது குறித்த முக்கிய தீர்ப்பு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் அக்கட்சி கொடியை பயன்படுத்துவது தொடர்பாக, தாங்கள் அளித்த புகார்களின் மீது, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

சுமார் 7 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு அந்த தீர்ப்பானது ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு குறித்த முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

ஏற்கனவே அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த பன்னீர் செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்வு நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க புகழேந்திக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த மனுவின் மீதான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Share this story