ஈரோடு கிழக்கு தொகுதி : விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நிகழ்வுகள்..
 

erodu32

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வந்தனர்.

இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், காலை 7 மணி முதல் 5 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில்மாலை 5 மணிக்கு 70.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 2021 சட்டசபை பொதுத்தேர்தலை விட தற்போது வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுவதால் மேலும் கூடுதல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில், ஆண்கள்- 77,183, பெண்கள்- 83,407, மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேர் என மொத்தம் 1,60,603 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டசபை பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 66.56 என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story