அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு.!
 

For government employees, the increase in internal prices.!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை வழங்கப்பட உள்ளது. 

இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக, கடந்த 1½ ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. 

இந்நிலையில், கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

தற்போது, ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக, இந்த வார இறுதியில் மத்திய மந்திரி சபை கூடி அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இது 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை மாதத்தில் இருந்து, இந்த தொகை வழங்கப்பட உள்ளது. 

இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.

Share this story