முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கைது

Former minister Rajendra Balaji was arrested today

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அரசு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில், ஜாமீன் வழங்க கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தலைமறைவானார். 

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து, போலீசார் தேடி வந்தனர். 

மேலும், அவருக்கு நெருக்கமானவர்களிடமும் போலீசார் விசாரித்து வந்தனர். தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை ஓசூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ராஜேந்திர பாலாஜியுடன் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Share this story