தோழி விடுதிகள்-இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி : முதல்வர் ஸ்டாலின் டுவிட்

By 
sta33

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறிஇருப்பதாவது:-

* தோழி விடுதிகள்-இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது!

டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

* குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாம்கள் மூன்று கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் நடத்தப்படுகிறது.

மொத்தம் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில், முதல் கட்டமாக 704 நியாய விலைக் கடைகளுக்கு 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 724 நியாயவிலைக் கடைகளுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக விடுபட்டவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.


 

Share this story