ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு; மற்றும் வெள்ளி, சனியில் கோவிலுக்கு செல்லத் தடை..

Full curfew every Sunday; And forbidden to go to the temple on Friday and Saturday.

கொரோனா பரவல் தடுப்பு பணி தொடர்பாக, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இனிமேல் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். 

இதன்மூலம், தமிழக அரசு ஞாயிறு அன்று முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மேலும் கட்டுப்பாடுகள் தொடர்பாக விரிவான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
*

Share this story