குஷ்புவுக்கு, அண்ணாமலை வாழ்த்து..

kushboo2

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகையும், பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நியமனம் குறித்து குஷ்பு கூறியதாவது,

'ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன்' என்றார்.

Share this story