பாதி திமுக.காரர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் - வானதி விமர்சனம்..

By 
vanathibjp

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற அலுவலகம் முன்பு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன்,

'தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வெயில் பதிவாகக்கூடிய இடங்களாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் வெகு வேகமாக தொழிற்சாலைகளை பெருக்குவதிலும், நகரப்புறமாக்குவதிலும் இந்தியாவிலேயே முதன்மையில் இருக்கக்கூடிய மாநிலம். இவை காலத்தின் தேவை என்றாலும் கூட அந்த வளர்ச்சி என்பதும், வேலை வாய்ப்பு என்பதும் சுற்றுப்புற சூழலோடு இணைந்து வந்தால் தான் அங்கு மக்கள் வாழக்கூடிய இடங்களாக இருக்கும். 

குடிநீர் தட்டுப்பாடு என்பது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. அதற்காக சிறப்பு நிதி ஒதுக்கினால் போதாது. லாரிகள் மூலம் தண்ணீர் குடிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை லாரிகள் வந்தது என்று தெரியாது. அதில் முழுமையாக தண்ணீர் வந்ததா என தெரியாது. குடிநீர்  வழங்குவதில் சரியான முறையை பயன்படுத்தி அந்த பணம் சரியாக செலவழிக்கப்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும். 

திமுக அரசு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சனை, வறட்சி  இது போன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு யாரெல்லாம் சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்களோ, யார் மாநில அரசுக்கு எதிராக குறிப்பாக திமுக குடும்பத்துக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்கள் மீது வழக்கு போடுவது, சிறையில் அடைப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். எது மக்கள் பிரச்சனையோ அதற்கு முக்கியத்துவம் தராமல் எங்கள் அதிகாரத்தை எப்படி காட்டுகிறோம் என்ற வீதியில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாக தெரிவித்தார். 

மேலும் சவுக்கு சங்கர் எங்கள் மீது செய்யாத விமர்சனம் கிடையாது. மோசமான விமர்சனங்களை எனக்கும் செய்திருக்கிறார். தங்கள் அதிகாரத்தை மாநில அரசு எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை பார்க்க வேண்டும். இவர்களுக்கு எதிராக பேசினால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இந்த அரசு இவ்வளவு மோசமாக அதிகாரத்தை பயன்படுத்துகிறது என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை, போதை பிரச்சனை, கண் முன்னால் அடுத்த தலைமுறை  வீணாகி கொண்டிருப்பதை தமிழகத்தில் பார்க்க முடிகிறது, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அதற்கு இந்த அரசு முக்கியத்துவம் தரவில்லை. ஒருவர் மீது வழக்கு போடுவது என்றால் கஞ்சா வழக்கு போடுவதை நீண்ட ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை தற்போதும் திமுக அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் கஞ்சா போடுவதற்கும் போதை போடுவதற்கும் திமுகவினருடன் உள்ளவர்கள் தான் பெரிய தொழிலாக நடத்துகிறார்கள். 

அதை விட்டுவிட்டு கஞ்சா வழக்கு போடுவதை தற்போது திமுக அரசு தொடர்வது கேவலமானது. சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்பதில் உண்மை தெரியாது. ஆனால் கைது செய்யப்பட்டபோது மாநில அரசு மீது சந்தேகம் வருகிறது. அவ்வாறு தாக்கப்பட்டு இருந்தால் இந்த அரசு கேவலமான முன்னுதாரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என தான் அர்த்தம். 

பெண்களுக்கு எதிராக பேசியதாக வழக்கு எனக் கூறினால் திமுகவில் பாதிக்கும் மேல் கைது செய்திருக்க வேண்டும். திமுகவினர் பேசுவதெல்லாம் பெண்களுக்கு எதிராக தெரியவில்லையா? பெண் காவலர்களை இழிவாக பேசிவிட்டார் என பொங்குகின்ற அரசு, திமுகவினர் எவ்வளவு தூரம் பெண்களை கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வைத்த விமர்சனங்கள் எப்படிப்பட்ட வகையைச் சேர்ந்தது எனவும் சுட்டிக்காட்டியவர், தற்போது திடீரென பெண் காவலர்களாக உருமாறிவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் திமுகவினர் பெண்களை எவ்வாறு கேவளமாக பேசுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Share this story