ரஜினியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு..

Health inquiry in the presence of Chief Minister Stalin to Rajini ..

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில், உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். 

வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.

ஆனால், ரத்தக் குழாய் திசு அழிவுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனைக்கு நெரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் ரஜினி காந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். 

மேலும், மருத்துவமனை மருத்துவர்களிடம் ரஜினிக்கு  அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

ஏற்கனவே, அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்ட ரஜினி காந்த், தனது மகளின் செயலியை வெளியிட்டதுடன்,  குடும்பத்தினருடன் அண்ணாத்த படத்தையும் பார்த்து ரசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story