விவசாயிகளை அலைக்கழிப்பதை கண்டிக்கிறேன் : டிடிவி தினகரன்
 

I condemn the harassment of farmers DTV Dhinakaran

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதாவது :

'கொள்முதல் நிலையங்களில், மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன.

இதையெல்லாம், சரி செய்து விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தி.மு.க அரசு, அதற்கு மாறாக நெல் கொள்முதலில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து விவசாயிகளை மேலும் வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பெயரளவுக்கு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது. 

விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல் படுவதுதான் உண்மையான விவசாய நலன் என்பதை தி.மு.க அரசு உணருமா?' என்றார்.

Share this story