கோர்ட்டில், ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம் நிறைவு : தீர்ப்பு.?

judg

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

விசாரணை தொடங்கியது முதல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஞ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடடுக்கடுக்காக வாதங்களை முன்வைத்தனர். 

அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் இடைக்கால தடை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி குமரேஷ்பாபு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தவிட்டுள்ளார். 

வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு அவகாசம் அளித்துள்ளது.
 

Share this story