டெல்லியில், எடப்பாடிக்கு அமித்ஷா வச்சுவிட்ட பில்லிசூன்யம் : ஓபிஎஸ் தரப்பு தகவல் 

By 
marudhu155

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'எவனெல்லாம் பா.ஜ.க.வை எதிர்த்து பேசுகிறானோ, அவனை எல்லாம் அள்ளிக்கிட்டு டெல்லிக்கு வா என்று அமித்ஷா உத்தரவு போடவே.. 

மூத்திரம் பறிஞ்சு போன எடப்பாடி, பாஜக குறித்து தெனாவட்டாக பேசித் திரியுற சரக்கு சண்முகம், சிந்து குமாரு, மூனுசீட்டு முனுசாமி ஆகியோரையும், கூடவே தங்கமணி வேலுமணி ஆகிய மனவாடுகளையும் அழைத்துக் கொண்டு டெல்லிக்கு போயிருக்கிறார்.

அமித்ஷா அலுவலக அறையில், ஏற்கனவே அண்ணாமலையும் அமர்ந்திருக்க, எடப்பாடிக்கு தனி நாற்காலி கூட கொடுக்காத அமித்ஷா, ஒட்டுமொத்த எடப்பாடி தரப்பையும் ஒரே பெஞ்ச்சில்.. கோடாங்கிக்கிட்ட குறிபார்க்க வந்த ஆட்களைப் போல.. குந்தவைத்து வெகுவாக மந்திரித்து அனுப்பி இருக்கிறார்..

நீ நாலரை வருசம் ஆட்சி நடத்தி முடிக்க ஓ.பி.எஸ்ஸை ஒத்துழைப்பு கொடுக்க வைத்தோம். கூடவே அந்த நாலரை வருடத்தில், நீயும் உன் சகாக்களும் அடித்துக் குவித்திருக்கும் மொத்தப் பணம் எவ்வளவு, அந்தப் பணம் எல்லாம் எந்தெந்த நாடுகளில் யார் மூலம் பதுக்கப்பட்டு இருக்கிறது என்கிற விபரம் எல்லாம் விலாவாரியாக கண்டறியப்பட்டு, அனைத்தும் வருமான வரி, சிபிஐ அமலாக்க பிரிவு உள்ளிட்ட துறைகளின் கண்காணிப்பிலும் கணக்கெடுப்பிலும் இருப்பதை உள்துறை அமைச்சர் ஆவணங்களோடு எடுத்துப் போடவே.. எடப்பாடிக்கும், அவரது மூடர் கூட்டத்துக்கும் ஒன்னுக்குப் போகாத குறைதானாம்.

2024 நாடாளுமன்ற தேர்தலில், நாங்க சொல்வதை மறுக்காமல் கேட்க வேண்டும். மீறினால் ஆயுளெல்லாம் களி தின்ன வேண்டியிருக்கும் புரியதா.. என  அமித்ஷா அதட்டவே, அப்படியே ஆகட்டுஞ் சாமின்னு அவரது காலைத்தொட்டு கும்பிட்டுட்டு வந்திருகானுக.. நம்ம எடப்பாடி வகையறாக்கள்.

உள்ள வாங்குன ஊமக்குத்தை, நம்ம நாலு பேரும் யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாது. குறிப்பாக, சண்முகம் மப்புல உளறிடக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டு, ஊருவந்து சேர்ந்திருக்கு அபகரிப்பு கம்பெனி...

ஒழுங்குமுறையா கட்சியை ஒற்றுமைப்படுத்தி கணிசமான சீட்டுகளை தமிழ் நாட்டின் பங்காக தரவேண்டும். இதற்கு மாறாக நடந்து கொண்டால், எப்படி சசிகலாவை பெங்களூர் பரப்பனஅக்ரஹாரத்துக்கும், தினகரனை திகாருக்கும் அனுப்பிட்டு, கட்சியையும் ஆட்சியையும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகிய உங்கள் இருவரிமும் ஒப்படைத்த மாதிரி...

ஒன்ன தூக்கி உள்ளே வச்சிட்டு கட்சியையும்  ஆட்சியையும் ஓ.பி.எஸ்ஸிக்கிட்ட ஒப்படைக்க வேண்டியிருக்கும் என ஏகத்துக்கும்
அமித்ஷா தரப்பு எச்சரித்து அனுப்பியிருக்கு.

பிறகென்ன, அசடு வழிஞ்ச மொகத்த தொடச்சிக்கிட்டு வெளிய வந்து, 'அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த வாய்க்கா வரப்பு தகராறு ஏதும் கெடையாதுன்னு பத்திரிக்கையாளர்களிடம், கூச்சத்தோடு கொப்பளிச்சிட்டு ஊரு வந்து சேர்ந்திருக்கிறானுக டெண்டர் பாய்ஸ்..

இது தான் டெல்லியில் நடந்திருக்கு. அதனாலதான்.. டெல்லிக்கு போய் வந்ததுல இருந்து, எல்லாப் பயலும் வெளிக்கி போகாம கட்டிக்கின மாதிரியே திரியுறானுக..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story