தமிழகத்தில், 500 இடங்களில் கலைஞர் உணவகம் : உணவுத்துறை தகவல்

In Tamil Nadu, Artist Restaurant in 500 Places Food Information

இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உணவு பொது வினியோக துறையின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயால் தலைமையில் நடைபெற்றது. 

இதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது :

அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழக மக்களுக்கு சத்தான உணவுப்பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்‘ அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.978 கோடி செலவில் 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்களும் ரூ.4 ஆயிரம் ரொக்க தொகையும் வழங்கப்பட்டன. 

வருகின்ற 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1161 கோடி மதிப்பீட்டில் 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு 20 வகையான உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும், நகராட்சிகளில் 138 உணவகங்களும், கிராம பஞ்சாயத்துகளில் 4 உணவகங்களும் செயல்படுகின்றன.

ஒவ்வொரு உணவகம் மூலமாகவும் சராசரியாக நாளொன்றுக்கு 200 முதல் 400 நபர்களுக்கு முழு உணவு அதிக மானியம் கொடுத்து குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், பல்வகை சாதங்கள் (சாம் பார், கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம்) 5 ரூபாய்க்கும், 

தயிர் சாதம் 3 ரூபாய்க்குப் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் மாநில அரசு மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் இதற்காக ரூ.300 கோடி செலவு செய்கின்றன. 

விளிம்பு நிலையிலுள்ள வறியவர்களுக்கு உணவுப் பாதுகாப்பினை சமூக உணவகங்கள் மூலமாக உறுதி செய்திடும் வகையில், இதற்கு முந்தைய கூட்டத்தின்பொழுது குறிப்பிட்டவாறு 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில், 

மேலும் 500 சமூக உணவகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்' என்றார்.
*

Share this story