தமிழகத்தில், மது விற்பனைக்குத் தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு
 

By 
In Tamil Nadu, ban on sale of liquor Election Commission order

தமிழகத்தில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 

தடை உத்தரவு :

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதியில், மது பாட்டில் விற்கத் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது விற்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மது பாட்டில்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

5 கி.மீ. சுற்றளவு :

அதனைத் தொடர்ந்து, 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து 5 கி.மீ.சுற்றளவில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story