பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

By 
In the Assembly, Opposition to the Filing of the Amendment Bill AIADMK Walk

தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. 

இதில், தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி உரையாற்றினார். 

கவர்னர் உரை நிறைவு பெற்ற பிறகு, அலுவல் கூட்டம் நடைபெற்று, சட்டசபை ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது.  எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். 

அதன் பின்னர், கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை 110 விதியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார். 

நகராட்சி சட்டங்கள் திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார். பல்வேறு சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 

இந்நிலையில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share this story