பிரிட்டன் பொதுத்தேர்தலில், வழக்கறிஞர் எம்.ஜிஆர். நகர் புகழேந்தி தீவிர பிரச்சாரம்..

By 
mgrp4

பிரிட்டன் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், குரோய்டன் தெற்கு (Croydon South) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும் அப்பு தாமோதரன் அவர்களின் நண்பருமான பென் டெய்லர் (Ben Taylor) அவர்களை ஆதரித்து, வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது குறித்த விவரம் வருமாறு: 

சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரிட்டன் தேர்தல் குறித்த அறிவிப்பை ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

புதன்கிழமை தனது டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்திற்கு வெளியே நின்று, மழையில் நனைந்தபடி உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், "தேர்தலில் ஒவ்வொரு வாக்கிற்காகவும் கடுமையாக போராடுவேன். கன்சர்வேடிவ் கட்சிக்காக ஐந்தாவது முறையாக பதவியேற்க வேண்டும்,” என்றார்.

இலையுதிர் காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று பல தரப்பினர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரிஷி சுனக் முன்னதாகவே பொதுத்தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறார்.

பிரிட்டன் தேர்தலில் போட்டியிடும் தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவர் சர் கியர் ஸ்டார்மர், "கன்சர்வேடிவ் கட்சியின் குழப்பங்களில் இருந்து விலகி இருங்கள். இது மாற்றத்திற்கான நேரம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ ஐந்து வார தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ள நிலையில், அடுத்த வாரம் வியாழன் அன்று முறையாக பாராளுமன்ற செயல்பாடுகள் நிறுத்தப்படுவதற்கு முன்னதாக இடை நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், திடீரென்று பிரிட்டன் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பரபரப்பான காலகட்டத்தில், சூடுபிடித்த பிரச்சாரத்தில் குரோய்டன் தெற்கு (Croydon South) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும் அப்பு தாமோதரன் அவர்களின் நண்பருமான பென் டெய்லர் (Ben Taylor) அவர்களை ஆதரித்து வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 

Share this story