திருச்சியில், ஓ.பி.எஸ். அணியின் பிரமாண்ட மாநாடு : சசிகலா பங்கேற்பு?

opsmeet

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் வருகிற 24-ந்தேதி திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சசிகலாவை அழைக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார்.

இதுகுறித்து சசிகலா நேற்று கருத்து தெரிவிக்கும்போது, 'எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதுபற்றி பரிசீலிப்பேன்' என்று கூறி இருந்தார். இதையடுத்து இன்று (சனிக்கிழமை) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருச்சியில் 24-ந்தேதி நடக்கும் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இதற்காக தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் மூலம் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனால், அடுத்தவாரம் ஓ.பி.எஸ்.அணியின் செயல்பாடுகள் மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story