தாக்குதலின் கீழ் இந்திய ஜனநாயகம் : ராகுல் பேச்சு

rahul454

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு கட்டமைப்புகள் கட்டுபடுத்தப்படுகின்றன. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அரசியல்வாதிகளும் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரது செல்போன்களில் பெகாசஸ் ஓட்டுக்கேட்பு மென்பொருள் உள்ளது.

என்னுடைய செல்போனிலும் பெகாசஸ் இருந்தது, போனில் கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர்" என்றார். மேலும், அவர் "கிரிமினல் வழக்குகளின் கீழ் எனக்கு எதிராக பல குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சியாக, ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மீது இந்த வகை தாக்குதலை கொண்டிருக்கும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம்" என்றார்.

Share this story