எடப்பாடி நடத்துகிற இன்ஸ்டன்ட் இடியாப்ப தேர்தல் சட்டவிரோதமானது : மருது அழகுராஜ்

marudhu125

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ்... 'கூமுட்டை தலைவனும், தீவட்டி தடியனும்' எனற தலைப்பில், வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, ஏற்கனவே முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2026 வரைக்கும் ஓ.பி.எஸ் ஈபி.எஸ். தான் என்பது தேர்தல் ஆணைய பதிவுகளிலும் ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டு, அது தொடரும் நிலையில்..

அபகரிப்பு எடப்பாடி திடீர் தேர்தல் நடத்தி அதிபராக முயற்சிப்பது, முதல் திருமணத்திற்கு விவாகரத்து பெறாமலே சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்வதற்கு சமமாகும்.

மேலும், தன்னை எதிர்த்து போட்டியிடுவார்கள் என்று இனம் கண்டு கொண்டு அவர்களையெல்லாம் நீக்கிவிட்டு, தான் மட்டுமே போட்டியிடுவேன் என்பது ஆளுமையற்ற ஆண்மையற்ற  கோழைச்செயலாகும்.

எடப்பாடியை முன்மொழியும் மற்றும் வழிமொழியும் மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடியால் தீனி போட்டு வளர்க்கப்பட்ட பிராணிகளே தவிர அவர்களெல்லாம் தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ஜனநாயக காவலர்கள் அல்ல,..   

எனவே, தருமத்துக்கும் சட்டத்துக்கும் எதிராக கட்சியை வைத்து மக்கள் பணத்தை திருடி, அப்படி திருடிய பணத்தை கொண்டு கட்சியையே திருட முயலும் எடப்பாடிக்கு ஈரோட்டு கிழக்கு தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டிய போதும், அதிகாரப்பித்து பிடித்து அலையும் திருந்தாத எடப்பாடியின் அடுத்த மடத்தனமே அவர் நடத்துகிற இன்ஸ்டன்ட் இடியாப்ப தேர்தலாகும்...

இதற்கு, நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றம் உள்ளிட்ட அனைத்து மாடங்களிலும் சரியான சாட்டை அடி விரைவில்  கிடைக்கும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story