சென்னை, அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Interview with Chief Minister MK Stalin at Government Hospital, Chennai

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

ஒமைக்ரான் சிகிச்சை மையம் மற்றும் படுக்கைகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். 

மேலும்,  தானியங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள கூடுதல் நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசரகால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்புக் கிடங்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

அவருடன்  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.
*

Share this story