மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டமாக அறிமுகம் செய்கிறதா.?

By 
dmkbjp

மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தனர். இதற்கு தமிழ்நாடு அரசின் Fact Check உண்மை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் படி, சீர்மிகு நகரங்கள் மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது அதன் படி,

சீர்மிகு நகரங்கள் (Smart City

ஸ்மார்ட் சிட்டியின் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 100 நகரங்களை தேர்வு செய்து தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை சீர் மீகு நகரங்களாக மாற்றும் திட்டமாகும்.

2015 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசும் 50 : 50 என்ற பங்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம்

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இடையே உள்ள வளர்ச்சி இடைவெளியை குறைக்க 121 நகராட்சி  மற்றும் 528 நகர பேரூராட்சியில் இந்த திட்டம் அமலில் உள்ளது.

இந்த திட்டத்திற்கான முழு நிதியை தமிழக அரசே வழங்குகிறது. எனவே மத்திய அரசின் நலத்திட்டத்தை பெயர் மாற்றி மாநில அரசு திட்டமாக அமலாக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

இதேபோல பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டமான  பிரதான்  மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை கனவு கலைஞர் கனவு இல்லம் என்று திட்டமாக மாற்றி உள்ளதாக  தமிழக பாஜக மாநில தலைவர் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்திருந்த கருத்திற்கு   Fact Check உண்மை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்  என்பது 1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில் 72,000 ஒன்றிய அரசும் 48,000 தமிழ்நாடு அரசும் தொடங்குகின்றன.

மத்திய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு காங்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்குகிறது. ஆக இந்த திட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது

மேற்கண்ட 2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70 சதவீதத் தொகை வழங்குகிறது மத்திய அரசு 30% தொகை  மட்டுமே தருகின்றது

கலைஞர் கனவு இல்லம் திட்டம்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முதல்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் தலா 3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசை ஒட்டுமொத்த நிதியையும் வழங்குகிறது.

கிராமப் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் இதுவாகும்.  2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில் நிலத்தையும் அரசே வழங்குகிறது.

Share this story