ஒருங்கிணைந்து முயற்சிப்பது மிகவும் அவசியம் : பிரதமர் மோடி

By 
It is important to work together Prime Minister Modi

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். 

இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு  ஒலிபரப்பப்பட்டது. இதில், பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு :

'கொரோனாவின் புதிய உருமாற்றத்தை நாம் மறந்துவிடக்கூடாது. நமது கூட்டு முயற்சிதான் கொரோனாவை வீழ்த்தும். 

இந்தியாவில் 140 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனுக்குமான சாதனை.  கொரோனாவின் புதிய உருவமான ஒமைக்ரான் நமது கதவைத் தட்ட தொடங்கியுள்ளது. 

சர்வதேச பெருந்தொற்றை வீழ்த்த, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது மிகவும் அவசியம். 

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங், ஒட்டுமொத்த தேசத்திற்கும் உந்து சக்தியாக இருந்தார். 

வெற்றியின் உச்சத்தை அடைந்தபோதும் வருண் சிங், தனது அடித்தளத்தை மறக்கவில்லை. 

எதில் நீங்கள் பணியாற்றுகிறீர்களோ அதில் அர்ப்பணிப்புடன் இருங்கள், நம்பிக்கை இழக்காதீர்கள்' என்றார்.

Share this story