அது அவர்களின் தரத்தை காட்டுகிறது : எதிர்க்கட்சியினர் குறித்து, பிரதமர் மோடி உரை..

pmmodi3

பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

குடியரசு தலைவர் உரைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். தீர்மானம் முதல் வெற்றி வரை குடியரசு தலைவர் உரையில் அனைத்தும் இடம்பெற்றிருந்தன.

தொலைநோக்கான உரை மூலம் மக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறார் குடியரசு தலைவர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. நேற்று ராகுல் பேசும்போது ஒருவித கொதிநிலை காணப்பட்டது. பாராளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் புரிதலுக்கு ஏற்ப உரையாற்றினர்.

ஒவ்வொருவரும் தங்களின் குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர். இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தொரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் அறிவுறுத்தினார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மோடியின் உரையை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர்.

Share this story