'கலாஷேத்ரா' பாலியல் புகார் விசாரணை குழு பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை : வழக்கறிஞர் அஜிதா அதிருப்தி 

By 
kala54

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகாரை அடுத்து இது தொடர்பாக பேராசிரியர் ராஜபத்மன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தின் உட்புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் அஜிதா விலகியுள்ளார்.

விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கலாஷேத்ராவில் நடைபெறும் சமீபத்திய நிகழ்வுகள், எழுந்துள்ள பிரச்னைகளுக்கு நிர்வாகம் தந்த பதிலால் மிகவும் அதிருப்தி அளிப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் மாணவர்களின் அதிருப்தியால், விசாரணை குழு உறுப்பினர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் அஜிதா, கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் கடந்த 4 ஆண்டுகளாக உட்புகார் விசாரணைக் குழுவின் உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story