ராகுல் காந்திக்கு ஆதரவாக, கமல்ஹாசன் டுவீட் : விஷயம் என்ன தெரியுமா?

 

krg

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-

இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் நிறைய சோதனைகளையும், நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான தங்களின் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this story