காவிரிக்கரையும் கடைசிப்பந்தும் : ஓபிஎஸ் தரப்பு வெற்றி முழக்கம்

பரபரப்பான அரசியல் அனலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அதிமுக்கிய அறிக்கை வருமாறு :
'ஐந்து பந்துகளே மிச்சமிருக்க,
இருபத்து
ஒன்பது ரன்கள்
வெற்றிக்கு தேவை என்னும்
கடினமான இலக்கு..
சாத்தியம்
இல்லை
என அவர் சார்ந்த
கல்கத்தா அணியின்
ரசிகர்களே
மைதானத்து
காலரியை விட்டு
மெளனமாக
கலைந்து
போகிறார்கள்..
எதிர் அணியினரிடம்
ஏளனப் பார்வை..
நேரலை விமர்சகர்கள்
கேலி பேசுகிறார்கள்
ஆனால்,
நம்பிக்கையோடு
ரிங்கு சிங்
என்கிற
அந்த இளம் வீரர்..
அதிரடியாக
ஐந்து பந்துகளையும்
சிக்சர்களாக அடித்து,
முப்பது ரன்களை எடுத்து
ஆட்டத்தின் முடிவை
அதிசயம் ஆக்குகிறார்..
அசந்து நிற்கிறது
ரசிகர்கள் கூட்டம்..
நடுவருமே
தன்னை மறந்து
கை தட்டுகிறார்..
ஆம்..
கடைசிப் பந்தில்
களங்கள் மாறுவது
விளையாட்டில் மட்டுமல்ல;
அரசியலிலும் தான்..
காண வேண்டுமா.?
காவிரிக்கரைக்கு
ஏப்ரல் 24
மறவாமல் வா..
ஒப்பில்லா தாய் தந்த
தப்பில்லா தங்க மகன்
ஓ.பி.எஸ்.
அழைக்கிறார்
இனியொரு
விதி செய்வோம்..
நம் உரிமை
நம் கழகம்..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.