கரையான்களின் தலைவன் கே.பி.முனுசாமி : மருது அழகுராஜ் 'எரிதணல்' உரை 

marudhu101

'அந்த Moon சாமியும், இந்த முனுசாமியும்' என்ற தலைப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'ரிக் வேதத்தில் ஒரு சம்பவம் உண்டு. 

அரக்கர்களை அழிக்க பரமசிவன் போருக்கு புறப்படுகிறார். அப்போது, சிவனை அவமானப்படுத்த 
எண்ணுகிறான் இந்திரன்.

விடிந்தால் போர்.

சிவனின் வில்லில் உள்ள நாணை எப்படியாவது அறுத்துவிட வேண்டும் என திட்டமிட்ட இந்திரன், அதற்கு கரையானின் உதவியை நாடுகிறான்.

ஆம், எது கிடைத்தாலும் அரித்து தின்னும் உயிரினமான கரையான் கூட்டத்து தலைவனை அழைத்து, சிவனது வில்லின் நாணை நீ துண்டிக்க வேண்டும் என இந்திரன் வேண்டவே, 

'சரி.. அப்படியே செய்து விடுகிறேன். எனக்கு என்ன தருவாய் என கரையான்களின் தலைவன் கைக்கூலி
கேட்க,, 

'இதை செய்து முடித்தால், இன்று முதல் ஈரப்பசை இருக்கும் இடத்தில் எல்லாம் அரித்துத் தின்றே ஆயுளை ஓட்டுகிற வரத்தை உனக்கு  தருகிறேன் என்றான் இந்திரன்.

அப்படி, இந்திரன் கொடுத்த வரத்துக்காக இறைவனது வில் நாணை துண்டித்து பெற்றதுதான், ஈரப்பசை இருக்கும் இடம் யாவிலும் கரையான்கள் பிழைப்பு நடத்தும் வாய்ப்பு என்றால்..

இப்ப சொல்லுங்க..

அந்த Moon சாமி வில்லின் நாணை அறுத்திட்ட அந்த கரையான்களின் தலைவன் இந்த கே.பி.முனுசாமி தானே.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 


 

Share this story