பயங்கரவாதிபோல மிரட்டுபவர் மீது பாயுமா சட்டம் : ஓபிஎஸ் தரப்பு கேள்வி

எடப்பாடி மீது வழக்கு என்றால், அதனை எதிர் கொண்டு நிரபராதி என நிரூபிப்போம் என்பதுதானே சரியாகும்.
அதற்கு மாறாக, மனித வெடிகுண்டாக மாறுவோம் என ஒரு கும்பலை கூட்டி வைத்துக் கொண்டு, இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கடந்த காலத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் பொதுவெளியில் நின்றுகொண்டு பயங்கரவாத மிரட்டல் விடுக்கிறார் என்றால்..
ஆர் டி எக்ஸ் உள்ளிட்ட மனிதவெடி குண்டுக்கான தயாரிப்பு அம்சங்கள் அவரிடம் இருப்பதற்கு அவரது பேச்சு ஒப்பளிப்பு ஆகாதா..
ஒரு தீவிரவாதிபோல அவர் மிரட்டுவது ஆட்சியாளர்களையா. இல்லை, காவல் துறையையா.. இல்லை நீதி மன்றத்தையா.. இல்லை புகார் கொடுத்த இளைஞரையா.. என்பதை மனித வெடிகுண்டு உதயகுமாரை கைது செய்து காவல்துறை விசாரிக்க வேண்டும்..
கடந்த காலத்தின் பேரிடர் மீட்பு துறையை கைவசம் வைத்திருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரே மனித வெடிகுண்டாக மாறி, மக்களுக்கு பேரிடரை உருவாக்குவேன் என்று காவல் துறை முன்னிலையிலேயே மிரட்டுகிறார் என்றால், இவர்.. அரசியல் அமைப்பு சட்டத்தின் பேரால் எடுத்திட்ட உறுதிமொழிக்கு எதிராக நடப்பது உறுதியாகிறது..
அப்படி எனில், சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தே அவர் நீக்கப்பட வேண்டும்.
சாமானிய மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய ஒருவர், இதுபோல வன்முறையை தூண்டுவேன் என பேசுவதை சாதாரணமாக கடந்து போனால், அது மனித வெடிகுண்டு் கலாச்சாரத்தை ஆமோதிக்கும் அபாயம் ஆகிவிடுமே.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.