நிர்மலா சீதாராமன் தலைமையில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது.

By 
The meeting of all state finance ministers began under the chairmanship of Nirmala Sitharaman.

தற்போது ஜிஎஸ்டியில் பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஐந்து வரி அடுக்குகள் உள்ளன.

தலைநகர் டெல்லியில் 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில், வரிச் சீர்திருத்தம் மீதான ஆய்வு அறிக்கைகளை மாநில நிதி அமைச்சர் குழு, நேரடியாக சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில், சில பொருள்கள் மீதான வரிவிகிதத்தை மாற்றியமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

எனவே, மத்திய அரசின் இந்த முடிவை சில மாநிலங்கள் எதிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story