தெம்போடு கொடி பிடிப்போம் : ஓபிஎஸ் தரப்பு முழக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கர்ஜனைக் கவியுரை வருமாறு :
* தங்கமும் ரொக்கமும் கொடுத்து
குத்தகை எடுத்திட்ட
கூவத்தூர் பதவியை
தற்காத்துக் கொள்ளவும்..
ஆட்சி கவிழாமல் பாதுகாத்து
தப்பித்துக் கொள்ளவும்
ஓ.பி.எஸ்ஸிடம்
ஆள் அனுப்பி ஆதரவு தரக்கோரி
அழுதது யார்.?
இந்த ஒரு முறை மட்டும்
முதல்வராக
இருந்து கொள்கிறேன்
அடுத்த முறை
அண்ணன் ஓ.பி.எஸ்ஸே
முதல்வராக வருவதற்கு
முழுமனதோடு ஆதரிப்பேன் என
தங்கமணி, வேலுமணியை அனுப்பி
தரகு பேசி கெஞ்சியது யார்.?
* சரி,
அம்மா அரசை
ஆதரிக்கிறேன் என்று
ஒப்புதலை ஓ.பி.எஸ் தந்த வேகத்தில்..
ஆட்சியை பயன்படுத்தி
அவரவர் அடிக்கும் கொள்ளை
அவரவர்க்கு என
ஆட்சிக் காலத்தையே
அறுவடைக் காலமாக்கி
சம்பந்தி சகிதமாக
தொண்டர்களை மதிக்காத
டெண்டர்களின் ஆட்சியை
நடத்திக் கொழுத்தது யார்.?
கொரானா முதல்
கொடநாடு சம்பவம் வரை
கொடுங்கோல் நடத்தி,
கொள்ளைகளை
கொள்கையாக கொண்டது யார்.?
* தி.மு.க. வெற்றி பெற ஏதுவாக
பலவீனக் கூட்டணியை அமைத்ததும்,
பத்துப் புள்ளி
அஞ்சு என
பிடிவாத ஒதுக்கீடு செய்து,
பின்னடவை
உருவாக்கியதும் யார்.?
அமித்ஷா தொடங்கி ஓ.பி.எஸ் வரை
எடுத்துச் சொன்ன ஆலோசனைகளை
ஏற்க மறுத்து,
அழியும் நிலை தி.மு.வை
ஆட்சிக்கு வரவழைத்ததும்..
அதன்பிறகு,
ஒரு ஓட்டில் இருவர் தேர்வு என
கட்சித் தேர்தல் நடத்தியதும்..
ஒற்றைத் தலைமை கற்பனை என்று
உத்தமராக பேசியதும் யார்.?
பிறகு ஒருநாள்,
ஒற்றைத் தலைமை வேண்டும் என
திரிக்கு நெருப்பு வைத்து
தீமைக்கு தூபமிட்டது யார்.?
அந்த அபகரிப்பை
நடத்தி முடிக்க
பொதுக்குழு எனும் பேரில்
பொறுக்கிக் குழு நடத்தியது யார்.?
அங்கே,
தரங்கெட்டு நடந்ததும்
தண்ணீர் பாட்டில்களை வீச விட்டும்,
தாயையெல்லாம் ஏசவிட்டும்
அதனை தடுக்காமல்
ரசித்தது யார்.?
* கழக நிறுவனர் எம்ஜிஆரின்
மாற்றக் கூடாத சாஸ்வத விதிகளை
தனக்காக மாற்றி,
தொண்டர்களின் உரிமையை பறித்திட்ட
சண்டாளன் யார்.?
பிறகு..
அம்மாவை
நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே
நீக்கியது யார்.?
அதனைச் செய்யாதே என்றவர்களை
கட்சியில் இருந்து நீக்குறேன்
என்றது யார்.?
எட்டுத் தோல்விக்கு வித்திட்டு
கட்சியை முட்டுச்சந்தில்
நிறுத்தியிருப்பதும் யார்.?
கழகத்தை
சாதிப் பிரிவுகளாக்கி சிதைத்திட
சதி செய்வது யார்.?
நான் கண்ணன் குலத்து கவுண்டர் என
கடிதாசி போட்டது யார்.?
கரன்சியை வைத்து மட்டுமே
கட்சியை களவாடத் துடிப்பது யார்.?
* நீதிக்கும் புறம்பான பாதைக்கு துணையாக
சரக்கு சண்முகம்,
மெயின் ரோடு ஜெயக்குமார்,
குட்கா பாஸ்கர்,
மினி மீல்ஸ்ம் எனக்கு
மெயின் மீல்ஸும் எனக்கே என
சகல நாற்காலிக்கும்
சதா அலையும்
மூனுசீட்டு முனுசாமி என
தரங்கெட்ட ஆட்களை வைத்து.
நெறி கெட்ட அரசியல் நடத்தும்
குணங்கெட்ட கொடியவர் யார்.?
ஒற்றுமை என்பதே
கெட்ட வார்த்தை என்பதும்,
ஒன்றாக இருந்த இயக்கத்தை
மேலும் மேலும்
துண்டாடி வருகிற
கோடாரிக் காம்பு யார்.?
விஷ நச்சுப் பாம்பு யார்.?
* ஒன்றரைக் கோடி தொண்டர்களின்
உழைப்பால் உருவான
கழகமெனும் ஆலயத்தை
உருத்தெரியாமல் அழிக்க சிதைக்க
சீழ்பிடித்த சிந்தனையோடு
சீற்றம் கொண்டு திரிகிற
சிலுவம் பாளையத்து
சின்னப்புத்தி யார்.?
இந்த
அத்தனை இழிவுக்கும்
மொத்தமும் காரணம் எடப்பாடி என்கிற
ஒற்றை மனிதரது
ஒவ்வாத பதவிப்பித்துதான் என்றால்,
அதனை ஒதுக்கி வைத்துவிட்டு..
கழகம் ஒன்றாகுதல் ஒன்றே
நன்றாகுதல் ஆகும்.
* ஆம்..
இதனை நடத்திக் காட்டிட
குருதியில் உறுதி கலந்து
சபதம் ஏற்போம்,
இதற்கு..
ஒப்பில்லா தாய் தந்த
தப்பில்லா தங்கமகன்
ஓ.பி.எஸ்
தலைமை ஏற்போம்,
தெம்போடு கொடி பிடிப்போம்
தேவையெனில்,
உயிர் கொடுப்போம்
வெற்றி வேல்
வீரவேல்..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.