கொட்ட பாக்கும்.. கொழுந்து வெத்தலையும்.. பாஜக மீட்டிங்கில் மீண்டும் இணைந்த நாட்டாமை ஜோடி..

By 
selam2

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே பெரிய கட்சியாக இடம் பெறும் எனத் தெரிகிறது. பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், நேற்று திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக கூட்டணியில் இணைவது உறுதியானது.

இந்நிலையில் இன்று காலை பாஜக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அண்ணாமலை ஆகியோர் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இன்று பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வரும் இந்த நிகழ்வில் கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட்டனர். ஓ பன்னீர்செல்வம், பாமகவின் ராமதாஸ், அன்புமணி, டிடிவி தினகரன் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

10 ஆண்டுகளுக்கு பின் சேலம் வரும் பிரதமர் மோடி என்பதால் பாஜக இதை பிரம்மாண்டமாக நடத்துகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் மேடைக்கு சரத் குமார் வந்தார். மேடையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் முதல் ஆளாக சரத் குமார் அமர்ந்து இருந்தார்.

அவரை தொடர்ந்து குஷ்பு மேடைக்கு வந்தார். சரத்குமாருக்கு இரண்டு சேர்கள் தாண்டி குஷ்பு அமர்ந்த பின்தான் திடீரென சரத்குமாரை பார்த்தார். பிறகு பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இருவரும் நாட்டாமை உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்த நிலையில் தற்போது பாஜக கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story