தொழில்துறைக்கு ஆதரவு அளிப்போம் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
May 11, 2023, 18:41 IST

ஹூண்டாய் நிறுவனத்துடன் 20,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
மின்சார கார் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. அதிக தொழில் முதலீடுகளை டி.ஆர்.பி.ராஜா ஈர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
நிர்வாக வசதிக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இலாகாக்கள் மாறினாலும் தொழில் துறையினருக்கு முழு ஆதரவு அளிப்போம். தொழில் துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.