மடப்பாடியின் துதிபாடிகள் : மருது அழகுராஜ் கடும் தாக்கு 

marudhu94

'அண்ணா தி.மு.க. கொள்கை அற்ற கொள்ளைக் கூட்டம் ஆகிடுமே' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தன் தலைவி வாசம் செய்த பங்காளாவில், கூலிப்படையை வைத்து கொலை செய்து கொள்ளை அடிப்பான்..

தரையை நக்கி பதவியை வாங்கி விட்டு, பதவி தந்தவரையே நாய் என்று நன்றி மறந்து விமர்சிப்பான்.

அம்மாவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் பதவி என்று நல்லவன் போல் பேசிவிட்டு, மறுவாரத்தில் அம்மாவையே நீக்குவான்... 

கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மாற்றக்கூடாத விதி என கட்டளையிட்டுப் போன விதிகளையும் காலில் போட்டு மிதிப்பான்..

ஆட்சி நடத்த உதவிய ஓ.பி.எஸ்ஸை பொறுக்கிகளை  கூட்டி வைத்து பொல்லாங்கு பேசுவான்.

அம்மா மறைந்த நாளை நன்னாள் என்பான்.. கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்பான்.

இப்படிப்பட்ட தற்குறியை, பொது அறிவும் பொதுவாகவே அறிவும் இல்லாத ஒரு கூமுட்டையை, குத்துக்கோல் திலகத்தை  ஒற்றைத் தலைமை என ஒரு கும்பல் ஊளையிட்டு அலைகிறது.

களவாடிய பணத்தை கொடுத்து துதிபாடிகளை ஏற்பாடு செய்கிறது என்றால்...அண்ணா தி.மு.க. கொள்கை அற்ற கொள்ளைக் கூட்டம் ஆகிடுமே.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 

Share this story