'மடிச்சு வச்ச வலையில, மாட்டுது பங்காளி மீனு' : ஈபிஎஸ் மாநாடும், ஓபிஎஸ் தரப்பு விமர்சனமும்..

marudhu149

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், வெள்ளந்தி சொற்களால்  வெளியிட்டுள்ள தகவல் வருமாறு :

"திங்கட்கிழமை முக்கியமான வேலை கெடக்கு, திருச்சி வரைக்கும் போய்ட்டு வரனும்.. வேன் ஒன்னு சொல்லியிருக்கோம். வேண்டப்பட்ட 
ஆட்கள் இருபது பேரு வாராக.

புண்ணியவான் எம்.ஜி.ஆர். தொடங்குன கட்சிய, அந்த மகராசி அம்மா முப்பது வருசமா மூச்சா நெனச்சு பொத்திப் பாதுகாத்த
பொக்கிஷத்தை..பைத்தியக்காரன் கிழிச்சது, கோவனத்துக்கும் ஆகாதுங்குற கதையா.. பழனிச்சாமின்னு ஒரு ஆளு பாழாக்க நெனக்கிறான்

ஒன்னரைக் கோடி தொண்டன் உசிராக காத்த கட்சிய, பயபுள்ள உருக்கித் தின்ன பாக்குறான்..

உலகத்துல.. அந்த அம்மா உளமார நம்புன ஒரே உத்தம மனுசன் ஓ.பி.எஸ் தான். அவரையே நீக்குறேன்னு சன்டியர்தனம் காட்டுறான்.

காசு பணத்தை வச்சிக்கிட்டு, எம்.ஜி.ஆர். கட்சிய ஏலக்கடையா மாத்துறான்.

நமக்கு அரசியல்ல ஈடுபாடு இல்லாட்டியும் இதை விடப்புடாது அப்பேய்..தப்பு பன்றதை காட்டிலும், அதைக் கண்டும் காணாது கடந்து போறதுதான் பெருங்குத்தம் பங்காளி..

அதனாலதான், வேன் ஒன்னு புடிச்சு.. விடியல்ல புறப்படுறோம். கட்சிக்காரங்க மட்டுமில்லாம.. இப்படி, பெருஞ்சனம் கூடுது.. அவன பீயப் பேல வக்கனும்பா..

இனிமே, எவனுக்கும் தர்மம் நீதிக்கு தவறா கட்சிய கைப்பத்துற நெனப்பு, கனவுலயும் வரப்புடாது..

விருப்பம் இல்லாத பெண்ணை பெண்டாள நெனப்பதும், தொண்டன் விருப்பத்துக்கு மாறா.. தலைவன் ஆக பாக்குறதும் தப்பில்லையா தம்பி..

மக்களை தெய்வமா மதிச்ச மகராசன் எம்.ஜி.ஆரு கட்சிய, எடப்பாடி அரைப்பாடின்னு, ஒரு மண்பாடி மக்குப் பயகிட்ட விடலாமா..

என்னது நீயும் வாரீயா.. சரி வா.. இருபதோடு நீ ஒன்னு, எடப்பாடி வாயில விழட்டும் மண்ணுன்னு போய்ட்டு வருவம்டோய். ஆமா..அந்த ஆளு வேறே, மதுரையிலே வந்து மாநாடு கூட்டப் போறானேமே. என்ன தைரியம், அந்த ஆளுக்கு..

வரட்டும் வரட்டும்.. மீனுக்கு நேரஞ் சரியில்லைனா.. மடிச்சு வச்சிருக்கிற வலையில் வந்து விழும்னு சொல்லுவாக. அதுதான் இது.. புரியுதா. சரிப்பா, திங்கட் கிழமை மறந்துடாதே திருச்சி..

இப்படி, ஊரெங்கும் சூல் கொள்ளுது புரட்சி; எடப்பாடிக்கு காத்திருக்கு திருச்சியில மிரட்சி.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story