நாய்க்குட்டியை கையில் வைத்து, மம்தா பானர்ஜி உடற்பயிற்சி..
 

mamta5

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சிறிய நாய்க்குட்டி ஒன்றை கையில் பிடித்துகொண்டு டிரெட்மில்லில் நடப்பதுபோன்ற ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.

அதில் பிசியான கால அட்டவணையில் இருந்தாலும் டிரெட்மில்லில் வேலை செய்வதற்கு கணிசமான நேரம் கொடுப்பதாக மம்தாபானர்ஜி குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் மம்தா பானர்ஜி நீலநிற பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவை அணிந்து, சிறிய பஞ்சு போன்ற நாய்க்குட்டியை பிடித்து கொண்டு டிரெட்மில்லில் நடக்கிறார்.

சில நாட்களில் உங்களுக்கு சில கூடுதல் உந்துதல் தேவை என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டது. வீடியோவை 3.13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.


 

Share this story