எடப்பாடியின் அபகரிப்பு அரசியலுக்கான மார்ச்சுவரியாக மார்ச் மாதம் அமையும் : மருது அழகுராஜ்
Sun, 12 Feb 2023

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு :
ஜனநாயகத்தை வலியுறுத்தி தொண்டர்களின் உரிமையை காத்திட போராடும் ஒருவரை, தனது பொருளாதாரவளத்தை கொண்டு அழிப்பேன் என ஒருவன் ஆணவம் கொண்டு அலைகிறான் என்றால், அவன் இயக்கத்தை சிதைக்க முற்படுகிற விஷக்கிருமி என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
மாற்றுக்கருத்துக்களை மதிக்கவும் ஏற்கவும் மறுக்கிற ஒரு ஒருவனால், மாட்சிமை மிக்க ஒரு திராவிட பேரியக்கத்தை ஒரு போதும் வெற்றிப்பாதையில் கொண்டு செலுத்த முடியாது.
எனவே, எடப்பாடியின் அபகரிப்பு அரசியலுக்கான மார்ச்சுவரியாக மார்ச் மாதம் அமையும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.