ஞாபக சக்தி முக்கியம் : அண்ணாமலைக்கு, மருது அழகுராஜ் அறிவுறுத்தல்

marudhu146

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அறிவுறுத்தியுள்ள செய்திக்கருத்து வருமாறு :

தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரது சொத்துப் பட்டியலையும் அடுத்தடுத்து வெளியிடப் போவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

அப்படி என்றால், ஊழல் ஆட்சி நடத்தி சொத்துத் சேர்த்த மேற்படி கட்சிகளோடு தேர்தல் கூட்டணியை பா.ஜ.க. எதிர்காலத்தில் வைத்துக் கொள்ளாது என எடுத்துக் கொள்ளலாமா..?

இல்லை, அவர்கள் பா.ஜ.க. வோடு கூட்டணி சேருகிறபோது புனிதப்பட்டு விடுவார்கள் என்பதாக நம்பனுமா.?

அண்ணா தி.மு.க. ஆட்சியில், மின்சாரம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்துட்டு.. இப்போ பா.ஜ.க.வுல சட்டமன்ற குழு தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனோட சொத்துப் பட்டியலை ஞாபகம் இல்லாம, அண்ணாமலை வெளிவிட்றப் போறாப்பள..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

Share this story