வானிலை மையம் திறன் குறைபாடு : அமித்ஷாவுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

Meteorological Center Disability MK Stalin's letter to Amit Shah

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியதாவது :

சென்னை வானிலை ஆய்வு மையத்தால், பெருமழை குறித்த அறிவிப்புகளை, உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை உள்ளது.

மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க, போதுமான திறன் குறைபாடாக உள்ளது.

புயல் போன்ற ரெட் அலர்ட் சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

* புதிய காவல் ஆணையரகங்களை விரைந்து கட்டமைக்கும் வகையில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. ரவியும், ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையரகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
*

Share this story