மொதல்ல நீ அதை செய் : எடப்பாடிக்கு, ஓபிஎஸ் தரப்பு சவால்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
* எடப்பாடியின் சட்டமன்ற சண்டியர்தனத்துக்கு ஆதரவாக, கவுண்டம்பாளையத்து அருண்குமார் ரவுடித்தனத்தில் ஈடுபட்டபோது, மனோஜ் பாண்டியனின் எதிர்வினை சீற்றத்தை ஒதுங்கி நின்று ரசித்த செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட உப்புப் போட்டு உண்பவர்களை பாராட்டலாம்.
* அண்ணா தி.மு.க. என்பது, எங்களோட அணியைச் சார்ந்தது என்ற எடப்பாடி பேச்சுக்கு, ' முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் மூன்றாம் பெரும் இயக்கமான அண்ணா திமுகவை இப்படி அணி, பிணின்னு சொல்ற அளவுக்கு மூனுசுக்கா ஒடச்சு முட்டுச் சந்துல நிறுத்துனவர் மனிதப்பண்புக்கு உரியவர் அல்லவே .
* ஓ.பி.எஸ்ஸை பேச அழைத்தார் என்று சட்டப்பேரவை தலைவரிடம் மல்லுக்கு நிற்கும் மடப்பாடி, நாடாளுமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினர் என்று பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிடுவதை எதிர்த்து, தன் அல்லக்கைகள் சகிதமாக, எடப்பாடி பாராளுமன்றத்தை நோக்கி படை திரட்டி போவாரா?
நீ, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டுன ஆம்பிளையா இருந்தா..மொதல்ல நீ அதை செய் பார்ப்போம்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.