அம்மா இருந்திருந்தா : ஓபிஎஸ் தரப்பு விமர்சனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு :
* கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்பதை கண்டறிந்த சிலுவம்பாளையத்து சாக்ரடீஸ் எடப்பாடி போலவே, அவரை சுற்றி நிற்கும் காக்கைகளும் சரியான கூகைகளாக இருப்பதற்கு கூடுதல் சான்று தான் தீர்ப்பை வெற்றி என கொக்கரிப்பதும் கூவுவதும்.
* கற்பனை செய்து பார்ப்போம்; எங்கள் அம்மா உயிரோடு இருந்திருந்தா, எடப்பாடிய தூக்கி என்கவுண்டர் செஞ்சிருப்பார்.
மைக் டைசன் ஜெயக்குமாரு போக்சோ சட்டத்துல புழலுக்கு போயிருப்பார். சரக்கு சம்முவத்தை குடிமீட்பு மையத்து கூண்டில் கொண்டு அடைச்சிருப்பார்.
முனுசாமிய புடிச்சு ஏதேனும் முகாமுல வச்சிருப்பார். வாய் பேசும் நத்தத்து வாயை புடிச்சு தச்சிருப்பார்.
தன்னை நீக்குன தரைப்பாடி கும்பலை தவிடுபொடி ஆக்கியிருப்பார். ஊத்தவாயன் உதயகுமாரை ஒன்னுக்கு போக வச்சிருப்பார்.
குண்டுக்கல் சீனிவாசன் குறுத்தெலும்பை எடுத்திருப்பாரு. குட்கா குட்டையனை குப்பை லாரியில ஏத்தியிருப்பார்.
பொன்னையனை புடிச்சு வந்து போயஸ் தோட்டத்துல புல்லு புடுங்க விட்டிருப்பாரு. செல்லூரு தூக்கியாந்து செவுல்லே விட்டிருப்பாரு.
உங்களோட நல்ல நேரம், எங்கள் அம்மா இல்ல. உயிரோடு இருந்திருந்தா, எடப்பாடி எங்க?
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.