பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான் மீது கொலை வழக்கு..

By 
imran41

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் பிரமாண்ட பிரசார பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி தொண்டர்கள் இம்ரான் கான் இல்லம் முன்பு பேரணி செல்வதற்காக குவிந்தனர்.

அப்போது போலீசாருக்கும், தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். இந்த மோதலில் அலி பிலால் என்ற தொண்டர் இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக லாகூர் போலீசார் இம்ரான் கான் உள்ளிட்ட 400 பேர் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 11 மாதங்களில் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்ட 89-வது வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story