நாட்டாமை பட பாடல்.. பாஜக அலுவலகம் முன் டான்ஸ் ஆடும் சரத் மற்றும் குஷ்பூ - வைரலாகும் நிகழ்வு.. 

By 
sksk2

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், இன்று தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் இந்த நேரத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். 

அதே சமயம் இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் பிரபல நடிகர் சரத்குமார் அவர்கள் தனது கட்சியை தற்பொழுது பாஜகவிடம் இணைத்துள்ளது தான் உச்சகட்ட பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அவருடைய கட்சிக்குள்ளேயே இதற்கு அதிருப்திகள் எழுந்து வரும் பொழுதும், தனது கட்சியை பாஜகவுடன் இணைந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

இந்த சூழலில் நாட்டாமை படத்தில் நடிகை குஷ்பூ மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடனமாடும் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாஜகவின் கமலாலயம்  அலுவலகத்திற்கு முன்பாக சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகிய இருவரும் நடனமாடுவது போல அது அமைக்கப்பட்டிருக்கிறது.

தற்பொழுது இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளதால் இணையவாசிகள் சிலர் இப்படி ஒரு வீடியோவை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்பொழுது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

Share this story