ஊரடங்கு உள்பட, புதிய கட்டுப்பாடுகள்? : முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை

By 
New restrictions, including curfew  Chief Minister Stalin's re-consultation

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆலோசனை :

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் கொண்டாட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசானை நடத்தி வருகிறார். 

ஊரடங்கு? :

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, விழாக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற மாணவர்களுக்கு விடுப்பு அல்லது ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்பது குறித்து, ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
*

Share this story