'புத்தாண்டும் புதுப்படமும்' : அண்ணாமலைக்கு, மருது அழகுராஜ் அறிவுறுத்தல் 

marudhu141

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள மூன்று செய்திக்குறிப்புகள் வருமாறு :

* வலுத்தவன் கீழே சரிந்தால், அவனிடம் கொழுத்துக் கிடப்பதை பறிக்க முடியாது என்பதற்காக.. கையிருப்பு கனமாக கொண்டவனை காப்பாற்றுவதில் களவாணிகள் குறியாக இருப்பார்கள்..

ஆம்.. சிரங்குக்காரனுக்கு சொறிபவனே சொந்தக்காரன்.

* நீ எங்கே போனாலும், உங்ககிட்டே மக்கள் ஆட்டோகிராப் கேட்பாங்களா? இல்லை, கட்சியை ஆட்டையப் போட்டது எப்படின்னு கேட்பாங்களா ..சொல்லுங்க மிஸ்டர் பர்பிசாமி..

* தமிழ் புத்தாண்டு திருநாளாகிய ஏப்ரல் 14-ல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். 

இந்த ஆண்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை  "இரண்டரை லட்சம் கோடி" மற்றும் "ரஃபேல் வாட்ச்" என்கிற இரண்டு திரைப்படங்களை வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இதனை, ஆன்லைனில் வெளியிடுவதற்கு பதிலாக சி.பி.ஐ. வருமானவரித்துறை அமலாக்கப்பிரிவு போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகளிலேயே வெளியிடலாமே.

நோக்கம், வெற்று அரசியலாக இல்லாமல் நடவடிக்கைகள் சார்ந்து..அவற்றை முன்னெடுப்பதுதான், ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் கடமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story