சாதிச்சான்றிதழ் வேண்டாம் : சினிமா இயக்குனர் வெற்றிமாறன் முழக்கம்
 

vetrimaran

பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் எனவும் விருப்பப்படுவோருக்கு 'No caste' சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் சிலரின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் பள்ளி, கல்லூரிகளில் கட்டாயம் சாதிப் பெயரை குறிப்பிட வேண்டும் என்று கேட்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த போது வெற்றிமாறன் கூறியதாவது;-

"என் பிள்ளைகளுக்கு 'ஜாதியற்றவர்கள்'(No Caste) என்ற சான்றிதழை பெற முயற்சித்தேன். அப்படி தர முடியாது என கூறிவிட்டனர். இதற்காக கோர்ட்டுக்கு சென்றபோதும், இந்து என்று இருப்பதால் நீங்கள் ஏதேனும் ஒரு சாதியை குறிப்பிட்டே ஆக வேண்டும் என கூறினர். பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

இருப்பினும் சமூக நீதிக்கு அந்த சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே அதை நாம் வேண்டாம் என்று உடனடியாக தூக்கிப் போட்டுவிட முடியாது. சமயம் சமூக நீதி அடிப்படையில் உரிமையை பெறுவதற்கு சாதிச் சான்றிதழை பயன்படுத்து அவசியம்.

அதே சமயம் சாதிச் சான்றிதழ் தேவையில்லை என நினைப்பவர்கள் சாதியற்றவர்கள் (No Caste) என போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் வேண்டாம் என்று சொல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்." இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்தார்.

Share this story