ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தவறானது : அமைச்சர் ராஜகண்ணப்பன்

O. Panneerselvam's allegation is false Minister Rajakannappan

தமிழக மாநகர பஸ்களில், ஆண்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என இருக்கும் நிலையில், ரூ.10 வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  குற்றம்சாட்டி இருந்தார்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது :

* அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுபோல, அரசு பஸ்களில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. 

* ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்  பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது.

* சாதாரண நகரப் பேருந்துகளில், இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவச பயணம் செய்துள்ளனர்.

* நண்பரான திருமாவளவன் அவராகவே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார். இதை பெரிதுபடுத்த அவசியமில்லை' என்றார்.

Share this story